ஆன்மீகம்
ஆன்மீகம் என்பது ஆண்டவன்மீது மிகுதியான பற்று வைப்பது. எந்த ஒரு மனிதரும் எப்பொழுதும் நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.நோயில்லாமல் இருக்க வேண்டுமானால் நமது மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க கூடாது.எல்லா உயிர்களும் நம்மை போல நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.அப்படி நினைத்தாலே நமது மனதில் இருக்கும் போட்டி,பொறாமை,வஞ்சம், கவலை,கோபம் முதலியவை குறைந்து விடும்.அதனால் மனது சுத்தமாகும்.நாம் மற்றவர் மீது அன்பு செலுத்தினால் மற்றவரும் நம் மீது அன்பு செலுத்துவர்.இதனாலேயே நமது மனதில் உள்ள நோய் பாதி குணமாகும்.மனதில் உள்ள நோய் குணமானால்தான் உடலில் உள்ள நோயும் குணமாகும்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே -திருமூலர்
இதற்கு தேவையான் இன்னொன்று நம்பிக்கை.ஒன்று இறை நம்பிக்கை.இன்னொன்று தன்னம்பிக்கை.மேலே சொன்னவை அனைத்தும் நடக்கும் என்று நம்ப வேண்டும்.நம்பினால் நிச்சயம் நடக்கும்.நம்பினார் கெடுவதில்லை.
No comments:
Post a Comment