விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி.அதாவது நமது விதியை அறிவால் வெல்லலாம் என்பது நேரடி பொருளானாலும் ஜாதக கட்டத்தில் சந்திரன் எந்த இடத்தில் உள்ளதோ அதை பொறுத்து தான் நமது வாழ்க்கை அமையும்.
சந்திரன் ஒரு ராசியில் 2.25 நாள் இருக்கிறான்.ஜாதகத்தில் இவர் நல்ல நிலையில் இருக்கும் போது ஒருவர் நல்ல திடமான மனதுடன் இருப்பார்.சுக போஜனம், நல்ல வஸ்திரம்,சுகமான நித்திரை,கீர்த்தியுடன் இருப்பார்.ஏழை முதல் பணக்காரன் வரை சந்திரன் ஆதிக்கம் நல்ல நிலையில் இருந்தால் தான் உயர்வான நிலையில் இருப்பார்கள்.
ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு குறிப்பிட்ட இடங்களில் கோசார சந்திரன் சஞ்சரிக்கும் போது இடத்துக்கு தக்க தினசரி நிகழ்வுகளில் பலன்கள் மாறுபடுகின்றன. ஜனன ராசிக்கும் கோசார சந்திரனுக்கும் உள்ள தூரத்தை வைத்து சந்திர பலம் கணிக்கப்படுகிறது. (தினசரி ராசி பலனுக்கு அடிப்படை).
ஜன்ம ராசியிலிருந்து நடப்பு சந்திரன் நின்ற ராசி வரை எண்ண…….
1 எனில் – ஆரோக்கியம், மனத் தெளிவு, சுகம், பெண்வழி அனுகூலம்
2 – காரியத் தடை, பண விரயம், மானக் கேடு
3 – லாபம், தைரியம், ஜெயம்
4 – ரோக பீதி, குழப்பம், செயல் நட்டம், தன விரயம், நீர் கண்டம்
5 – சஞ்சலம், காரிய தோல்வி
6 – சுகம், பணவரவு, வெற்றி
7 – பண வரவு, ஆரோக்யம், போஜன சயன சுகம்
8 – சோர்வு, மனக் குழப்பம், கலகம்
9 – அச்சம், காரிய தடங்கல்
10 – தொழில் சிறப்பு, நற்பலன்கள்
11 – லாபம், சுகம், உற்றார் நேசம்
12 – காரிய தன விரயம்
எனவே சந்திரன் நல்ல இடத்தில் இருக்கும்போது ஒரு காரியத்தை ஆரம்பித்தோமானால் அது நிச்சயம் வெற்றியில் முடியும்.
மீண்டும் சிந்திப்போம் .....