தியானம் செய்யும் முறை :
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் அல்லது தனியான வசதியான ஒரு இடத்தில் அமைதியாக கால்களை மடக்கி சித்தாசனத்தில் அல்லது சுகாசனத்தில்
(சம்மணமிட்டு )அமர்ந்து கொள்ளுங்கள்.இரண்டு கைகளையும் கோர்த்துக்கொண்டு கால்களின்மேல் வைத்துக்கொள்ளுங்கள்.
பெருவிரல்கள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்ளட்டும்.கண்களை மூடிக்கொள்ளுங்கள்.எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக்கொள்ளுங்கள்.எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதாக மனதால் உணருங்கள்.மூச்சு உள்ளேயும் வெளியேயும் செல்வதை கூர்ந்து கவனியுங்கள்.பல எண்ணங்கள் வந்து போகலாம்.அதை கட்டுப்படுத்தாதீர்கள்.அது தானாக அடங்கிவிடும்.அதன் மீது இருக்கும் கவனிப்பை விடுத்து மூச்சின் மீது கவனம் செலுத்துங்கள்.
கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து அமைதியாகும்.
பயன்கள்:
- மன அழுத்தம் குறைகிறது.
- மனம் தெளிவு பெறுகிறது.
- மனம் ஒருமுகப்படுகிறது.
- மன அமைதி கிடைக்கிறது.
- உடலில் உள்ள பிராண சக்தி அதிகரிக்கிறது.
- ஒரு சாந்த நிலை உண்டாகிறது.
- ஆன்ம சக்தி ஊக்கப்படுகிறது.
- தலை வலி , ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.
- மூளையின் சக்தி அதிகரிக்கிறது.
- ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
- தூக்கமின்மை,டென்ஷன் குறைகிறது.
மீண்டும் சிந்திப்போம் !