THIRUKKURAL

Sunday, October 2, 2011

ஆக்க சக்தி (POSITIVE ENERGY)

ஆக்க சக்தி (பாசிடிவ் எனெர்ஜி): POSITIVE ENERGY

எந்த சக்தி நன்மை செய்கிறதோ அதை ஆக்க சக்தி பாசிடிவ் எனெர்ஜி என்கிறோம்.

அழிவு சக்தி (நெகடிவ் எனெர்ஜி):NEGATIVE ENERGY

எந்த சக்தி தீமை செய்கிறதோ அதை அழிவு சக்தி நெகடிவ் எனெர்ஜி என்கிறோம்.

ஆக்க சக்தி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நன்மை நடக்கும்;ஆரோக்கியம் இருக்கும்.

ஆக்க சக்தி நமது உடம்பில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆக்க சக்தி நமது வீட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நமது வீட்டில் நன்மை நடக்கும்;ஆரோக்கியம் இருக்கும்.

நமது எண்ணம் செயல் அனைத்திலும் நாம் ஆக்க சக்தியை கொண்டு வர வேண்டும்.எல்லோரும் நலமாயிருக்க வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். பிற‌ருடன் பேசும்போதும் பாசிடிவ் ஆகவே பேசவேண்டும்.

உதாரணமாக‌,

நீங்க நல்லா இருக்கணும்” ,

வாழ்க வளமுடன்” ,

உங்க‌ளுக்கு நன்மையே நடக்கும்

போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும், பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.அது நமது வாழ்கையை காப்பீடு (Insure) செய்வதற்கு சமம் .

தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி.

அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது.

இரண்டு சக்திகளும் நமது மனதில்தான் உருவாகின்றன.ஒருவன் எந்த விதையை விதையை விதைக்கிறானோ அந்த மரமே உருவாகிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் நல்லவர்என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார். இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி குறைந்திருக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர்.

எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும். நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும். எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

எனவே ஆக்க சக்தி அதிகரிக்க முயற்சி செய்வோம்.

மீண்டும் சிந்திப்போம் !

No comments:

Post a Comment