ரெய்கி என்பது ஆன்மீகமான ஒரு விஷயம்.
நமது உடலில் உள்ள சக்கரங்களுக்கும்
(ஆற்றல் மையங்கள்) ரெய்கிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நமது உடலில் உள்ள
ஆற்றல் மையங்களில் சக்தியைப் பொருத்துதான் நமது உடல் ஆரோக்கியம் அமையும்.அந்த
ஆற்றல் மையங்களில் உள்ள சக்தி குறைவினை சரிசெய்வதும்,நெகடிவ் எனர்ஜியைக் களைந்து
பாசிடிவ் எனர்ஜியைக் கூட்டுவதும் ரெய்கியின் முக்கிய வேலையாகும்.
பிரபஞ்சம் எங்கும் COSMIC
ENERGY நிறைந்திருக்கிறது இதனைத் தமிழில் உயிர்சக்தி
என்றழைக்கலாம்.
அந்த எனர்ஜியைக் கிரகித்து அதனை அடுத்தவர் உடலில்
செலுத்துவதே ரெய்கி கலை.
நமது
உடல் மொத்தம் ஏழு சக்கரங்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருக்கிறது.இந்த சக்கரங்கள் சரியாக இயங்குவதற்கு அவற்றில் சரியான அளவு உயிர் சக்தி
இருக்கவேண்டும். அந்த சக்தி
மையங்களில் பல்வேறு காரணங்களால் சக்தி குறைபாடு
ஏற்படும்பொழுது அந்த
மையத்துக்கு உட்பட்ட அங்கங்களில் பாதிப்பு நேர்கிறது
என்பதுதான் ரெய்கியின்
தத்துவம். காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து குறிப்பிட்ட
அந்தச்
சக்கரத்தை வலுவூட்டுவதன்மூலம் இழந்த சக்தியை அந்தச் சக்கரம் பெற்றுவிடுகிறது சக்தி சமன் செய்யப்பட்டவுடன் பிரச்சினை தீர்ந்து உடல் பழைய நிலைமைக்கு வந்துவிடுகிறது..அதாவது வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் நோய் தீர்ந்துவிடுகிறது.
இது எப்படி சாத்தியம்? பிரபஞ்சம் எங்கும் இருக்கும் ஜீவசக்தியை எப்படிக் கிரகிப்பது அதனை எப்படி அடுத்தவர் உடலில் செலுத்துவது....? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகிறதுதானே? எல்லாவற்றிற்கும் வழிமுறைகள் இருப்பதுபோலவே இதற்கும் வழிமுறைகள் உள்ளன. தீட்சையும் சில வகை தியானங்களும் இதற்கான பாதையை அமைத்துத் தருகின்றன. தியானத்தைத். தொடர்ந்து சில பயிற்சிகளை மேற்கொண்டால் ரெய்கி வழங்குவதற்கான ஆற்றலைப் பெறமுடியும். அப்படி ஆற்றல் வரப்பெற்றவர்கள் பிறருக்கு ரெய்கி வழங்க முடியும்.

மன உளைச்சல்,
மனப்பிறழ்வு ,
மன
இறுக்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் ரெய்கி
சிகிச்சையினால்
பிரமாதமான பலன்களைக் காண்கின்றன. ரெய்கியால் எந்தவிதமான பக்க விளைவுகளும்
இல்லை.