THIRUKKURAL

Wednesday, September 7, 2011

ரெய்கி

பிரபஞ்ச சக்தி தான் உயிர்களை தோற்றுவித்து வாழ்க்கையினை கொடுத்திருக்கிறது.பிரபஞ்ச சக்தியை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துவதே ரெய்கி எனப்படும்.நமது உடலில் உள்ள ஆறு சக்கரங்களிலும் பிரபஞ்ச சக்தி அல்லது பிராண சக்தி சமநிலையில் இருக்க வேண்டும்.அந்த சமநிலை குலையும்போது நமது உள்ளமும்,பிறகு நமது உடலும் நோயினால் பாதிக்கப்படுகிறது.நிலைகுலைந்துபோன பிரபஞ்ச சக்தியை சமநிலைக்கு கொண்டு வருவது தான் ரெய்கி.
ரெய்கி என்பது அன்பின் வடிவம்.ரெய்கி அளிப்பவர் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டக்கூடியவர்.அவர் ரெய்கி சக்தியை அதாவது பிரபஞ்ச சக்தியை பிரபஞ்சத்திலிருந்து பெற்று அவர் அவரது கைகளின் மூலமாக மற்றவர்களுக்கு அளிக்கிறார்.அதாவது அவர் ஒரு தாரையாக செயல்படுகிறார்.பிரபஞ்ச சக்தி அவரது கைகளின் மூலமாக பாய்ந்து செல்கிறது.கைகளின் வழியாக நோயாளியை அடைகிற சக்தி எந்த பகுதிக்கு சிகிச்சை தேவையோ அந்த பகுதியை தானாகவே சென்றடைகிறது.
ரெய்கி அளிப்பவர் மந்திரவாதிஅல்லர்..மனித சக்திக்கு அப்பால் பட்ட சக்தியையும் பெற்றவர் அல்லர். பிரபஞ்ச சக்தியை உணரவும்,உணர்த்தவும் அறிந்தவர்.ரெய்கி அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். ஒவ்வொருவரின் மன நிலை,உடல் நிலை ஆகியவற்றை பொருத்து மாறுபடும்.ஆனால் எல்லோரும் உணர்வது மன அமைதியையும் ஓய்வான உணர்வையும் தான்.ரெய்கி முழுமையான மன அமைதியைக்கொடுக்கிறது.

ரெய்கியினால் பெறும் நன்மைகள்:
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுதிகிறது.
*உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சி பெறவைக்கிறது.
*உடலின் சக்தி மையங்களை ஒழுங்குபடுத்துகிறது.
*நச்சு பொருள்களிலிருந்து உடலை தூய்மைப்படுத்துகிறது.
*உடலில்,மனதில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை சக்தியை அதிகப்படுத்துகிறது.
*ரெய்கி மனதின் ஆழமான பகுதிக்குச்சென்று எதிர்மறையான ஆழ்மனப்பதிவுகளை அகற்றிவிடும்.
*சோர்வு நீங்கி புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
*பயம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.
உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மனமே காரணமாக இருப்பதால்,மனதுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலவிதமான நோய்கள் குறையவும்,மறையவும் காரணமாகிறது.
மீண்டும் சிந்திப்போம் !