நேசம்:
நேசியுங்கள்! அனைத்தையும் நேசியுங்கள்!!
நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும்
வரை காணும் அனைத்தையும் நேசியுங்கள்.நேசம் என்றால் அன்பு காட்டுதல்;அனைத்தையும்
விருப்புடன் பார்த்தல்.குழந்தைகளை நேசியுங்கள்; அவர்கள் செய்யும் அனைத்தையும் - அவர்களது
குறும்புகளை,அவர்களது இயக்கங்களை,ரசியுங்கள். அதேபோல உங்களது பெற்றோர்களையும்,வயதான
உங்கள் தாத்தா பாட்டிகளையும் நேசியுங்கள்.வயதானவர்களும் குழந்தைகளைப்
போலத்தான்,ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்கள் குழந்தைகளுடைய மன நிலைக்கு
வந்து விடுகின்றனர். எனவே அவர்களையும் நேசியுங்கள்.மற்றவர்களை நீங்கள்
நேசிக்கும்போது அதனால் கிடைக்கும் பலன் என்ன என்பதை நேசித்துப் பாருங்கள் தெரியும். மற்றவர்களுடைய துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சி
கொள்ளாதீர்கள். சிறிதேனும் வருந்த முயற்சியுங்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் என்றார் வள்ளலார்.
மீண்டும் சிந்திப்போம்!
No comments:
Post a Comment