THIRUKKURAL

Wednesday, August 3, 2011

தியானம்-2

தியானம் என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் நோய்களிலிருந்து விடுபட நாம் செய்யும் முயற்சி என்று சொல்லலாம். தியானத்தின் மூலமாகவே நம் மனதை பண்படுத்தி கட்டுக்குள் கொண்டு வர முடியும்.நம் அன்றாட வாழ்க்கையில் பல சம்பவங்கள் திரும்பத்திரும்ப நினைவில் வந்தது நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலை நமக்குள் இருப்பதால்,நமக்குள் இருக்கும் சக்தியை நாம் உணரவிடாமல் செய்கிறது.
தியானம் செய்யும் முறை :
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் அல்லது தனியான வசதியான ஒரு இடத்தில் அமைதியாக கால்களை மடக்கி சித்தாசனத்தில் அல்லது சுகாசனத்தில்
(சம்மணமிட்டு )அமர்ந்து கொள்ளுங்கள்.இரண்டு கைகளையும் கோர்த்துக்கொண்டு கால்களின்மேல் வைத்துக்கொள்ளுங்கள்.
பெருவிரல்கள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்ளட்டும்.கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக்கொள்ளுங்கள்.எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதாக மனதால் உணருங்கள்.மூச்சு உள்ளேயும் வெளியேயும் செல்வதை கூர்ந்து கவனியுங்கள்.பல எண்ணங்கள் வந்து போகலாம்.அதை கட்டுப்படுத்தாதீர்கள்.அது தானாக அடங்கிவிடும்.அதன் மீது இருக்கும் கவனிப்பை விடுத்து மூச்சின் மீது கவனம் செலுத்துங்கள்.
கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து அமைதியாகும்.
பயன்கள்:
  • மன அழுத்தம் குறைகிறது.
  • மனம் தெளிவு பெறுகிறது.
  • மனம் ஒருமுகப்படுகிறது.
  • மன அமைதி கிடைக்கிறது.
  • உடலில் உள்ள பிராண சக்தி அதிகரிக்கிறது.
  • ஒரு சாந்த நிலை உண்டாகிறது.
  • ஆன்ம சக்தி ஊக்கப்படுகிறது.
  • தலை வலி , ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது.
  • மூளையின் சக்தி அதிகரிக்கிறது.
  • ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
  • தூக்கமின்மை,டென்ஷன் குறைகிறது.
முதலில் பத்து நிமிடம் செய்யலாம்.பிறகு நேரத்தைஅதிகப்படுத்தி கொள்ளலாம்.

மீண்டும் சிந்திப்போம் !

தியானம்-1


நமது உடம்பே ஒரு கோவில் தான்.அதனை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

தலை :சிவன்
வயிறு : விஷ்ணு
இடுப்புக்கு கீழ் : பிரம்மா
வலது மார்பு : விநாயகர்
இடது மார்பு : முருகன்
அதற்கு சற்று கீழ் (இருதயம்) : சக்தி

உடம்பை ஒருவன் சரியாக பேணினால் அது கோவிலை பேணுவதற்கு சமம்.உடம்பை பேணுவது என்பது உடம்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்,அதை விட மனதை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
மனதும் உடலும் சுத்தமாக இருக்குமேயானால் அங்கு இறைவன் நிச்சயம் குடியிருப்பான்.
உடலை சுத்தமாக வைக்க தூய குளிர்ந்த நீரில் தலையுடன் குளிக்க வேண்டும்.
குளிக்கும் போது உடல் சுத்தமாக வேண்டும் என்பதுடன் மனதும் சுத்தமாக வேண்டும் என்ற எண்ணத்துடன் குளிக்க வேண்டும்.
குளித்தவுடன் உடம்பு சுத்தமாகி விடும்.ஆனால் மனது சுத்தமாக வேண்டும் என்றால் நாம் சற்று முயற்சிக்க வேண்டும்.
அதற்கு சுலபமான வழி தியானம் தான்.
தியானம் என்பது மனதை அமைதிப்படுத்தி,உடலை தளர செய்து உளவியல் ரீதியான சமநிலை நோக்கி முன்னேறுவது தான்.

மீண்டும் சிந்திப்போம் !