THIRUKKURAL

Wednesday, October 19, 2011

மந்திரம்

மனம்+திறம்= மந்திரம்

மனதை திறமாக வைத்துக்கொள்ள உதவுவது.

மந்திரம் இறைவனின் ஒலி வடிவம்.அதனை தொடர்ந்து ஜெபிப்பதனால் இறைவனின் அருள் கிடைக்கும்.மந்திரத்தை ஜெபிப்பவன் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.மேலும் தீவிர நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வலைகள் (Frequency)

இருக்கின்ற‌ன.

மந்திரம் சொல்லும் போது,அல்லது கேட்கும் போது கிடைக்கும் அதிர்வலைகள் நம்மையும் நம் சுற்றுப்புற‌த்தையும் தூய்மையாக்கி நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகளை(நெகடிவ் எனெர்ஜி) நீக்கி,ஆக்க சக்தியை(பாசிடிவ் எனெர்ஜி)கூட்டச்செய்கிறது.

ஆன்மீக சாதனையில் சாஸ்திரப்படிப்பு நமக்கு தூய்மையான எண்ணங்களையும் வலிமையையும் தருகிறது.சாஸ்திரங்களை புலமை பெறுவதற்காக மட்டும் படிக்ககூடாது. ந‌மது மனதை தெய்வீக நிலையில் வைத்திருக்கவும் உதவுகின்றன.

முழு நம்பிக்கை ஏற்பட்டாலேயே எல்லாம் கிடைத்தது போலத்தான்.

பயிற்சியினாலும்,வைராக்கியத்தினாலேயுமே மனதைக் கட்டுப்படுத்த முடியும்.

சாதாரண மனிதனுக்கு குண்டலினி, கீழுள்ள மூன்று சக்கரங்க‌ளில் மட்டுமே இயங்கும்.(மூலாதாரம்,சுவாதிஸ்டானம்,மணிப்பூரகம்)மன ஒருமைப்பாடு, தூய்மையான பக்தி,தியானம் போன்ற‌வற்றை பயிற்சி செய்யும் போது குண்டலினி சக்தியானது மேலெழும்பி சஹஸ்ராஹாரத்தை நோக்கி செல்கிற‌து.லிப்டில் ஒவ்வொரு தளமாக செல்வது போல் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள்,அதிர்வுகள்,இறைக்காட்சிகள் இதை அனுபவத்தில் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் சிந்திப்போம் !

மன நலமே உடல் நலம்

அரிது அரிது மானிடராய் பிறத்தலறிது என்ற அவ்வையின் சொல்லிற்கேற்ப நாம் மானிடராய்ப் பிறந்துள்ளோம்.மனிதப்பிறவி ஒன்றிற்கே மனம் என்று ஒன்று உண்டு;அதில் சிந்திக்கும் ஆற்ற‌லும் உண்டு.அந்த சிந்திக்கும் ஆற்றலை வைத்து மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.மனதை நம் வசப்படுத்தி விட்டால் பிறகு அதை நம் விருப்பத்திற்கு செயல்படுத்தலாம்.மனம் போன போக்கிலே நாம் போகக்கூடாது. நம் போக்கிலே தான் மனம் வர வேண்டும்.

இது ம‌ருந்து மாத்திரைகளினால் செய்யக்கூடியது அல்ல.ஒன்று தானாக இறைவனருளால் வரவேண்டும்.அல்லது நாமே பயிற்சியின் மூலமாக சிறிது சிறிதாக கொண்டு வரவேண்டும்.அந்த நிலை வர வர கோபம் கட்டுப்படும்,கவலையோ வருத்தமோ நம்மை பாதிக்காது.உள்ளம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் பிறகு உடலையும் சிறிது சிறிதாக நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடலாம்.

அதன்பிறகு நம் உடலில் உள்ள நோய்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.இருக்கும் நோய்களை அதிகமாகாமல் குறைக்கவும்,புதிதாக நோய்கள் வராமல் தடுக்கவும் செய்ய‌லாம்.திடீரென்று தோன்றும் நோயாக இருந்தால் அதை குணமாக்கவும் செய்யலாம்.

மனதை கட்டுப்பட்டிற்குள் வைத்துக்கொண்டால் (பயம்,கோபம்,கவலை,வருத்தம்,அதிர்ச்சி போன்றவை இல்லாமல்) நம் உடலில் உள்ள நோய் கூட அதன் தீவிரத்தை குறைத்துக்கொள்ளும்.அதற்கான வழி முறைகளை தெரிந்தவர்களிடம் சரியான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு மனிதனும் துன்பத்தை விரும்புவதில்லை.துன்பம் என்பது கவலை,வருத்தம்,பயம்,கோபம்,அதிர்ச்சி மன விளைவுகளினால் வருவது.துன்பமில்லா வாழ்க்கை வாழ நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.இதன் மூலம் துன்பத்தின் தாக்கத்தையாவது குறைத்துக்கொள்ளலாம்.

மீண்டும் சிந்திப்போம் !

Monday, October 17, 2011



எல்லோரும் எல்லா நலனும் பெற்று நல்வாழ்வு வாழ அனைவருக்கும் ஆன்மீக யோகாவின் நல் வாழ்த்துக்கள் !

Sunday, October 2, 2011

ஆக்க சக்தி (POSITIVE ENERGY)

ஆக்க சக்தி (பாசிடிவ் எனெர்ஜி): POSITIVE ENERGY

எந்த சக்தி நன்மை செய்கிறதோ அதை ஆக்க சக்தி பாசிடிவ் எனெர்ஜி என்கிறோம்.

அழிவு சக்தி (நெகடிவ் எனெர்ஜி):NEGATIVE ENERGY

எந்த சக்தி தீமை செய்கிறதோ அதை அழிவு சக்தி நெகடிவ் எனெர்ஜி என்கிறோம்.

ஆக்க சக்தி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நன்மை நடக்கும்;ஆரோக்கியம் இருக்கும்.

ஆக்க சக்தி நமது உடம்பில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நமது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆக்க சக்தி நமது வீட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நமது வீட்டில் நன்மை நடக்கும்;ஆரோக்கியம் இருக்கும்.

நமது எண்ணம் செயல் அனைத்திலும் நாம் ஆக்க சக்தியை கொண்டு வர வேண்டும்.எல்லோரும் நலமாயிருக்க வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். பிற‌ருடன் பேசும்போதும் பாசிடிவ் ஆகவே பேசவேண்டும்.

உதாரணமாக‌,

நீங்க நல்லா இருக்கணும்” ,

வாழ்க வளமுடன்” ,

உங்க‌ளுக்கு நன்மையே நடக்கும்

போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும், பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.அது நமது வாழ்கையை காப்பீடு (Insure) செய்வதற்கு சமம் .

தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி.

அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது.

இரண்டு சக்திகளும் நமது மனதில்தான் உருவாகின்றன.ஒருவன் எந்த விதையை விதையை விதைக்கிறானோ அந்த மரமே உருவாகிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் நல்லவர்என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார். இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி குறைந்திருக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர்.

எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும். நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும். எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

எனவே ஆக்க சக்தி அதிகரிக்க முயற்சி செய்வோம்.

மீண்டும் சிந்திப்போம் !